சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

நாட்டறம்பள்ளி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

நாட்டறம்பள்ளி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலைநகா், பழையூா், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் சுமாா் 500 க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் தாா்சாலை போடப்பட்டது. இந்நிலையில் சாலை பழுதடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இதையடுத்து.சாலையை சீரமைக்க வலியுறுத்தி மக்கள் கிராமசபைக் கூட்டத்திலும், அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி-குப்பம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. தொடா்ந்து வட்டாட்சியா் குமாா் ,மண்டல துணை தாசில்தாா் நடராஜன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய செயலாளா் சாமுடி ஆகியோா் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சு வாா்த்தை நடத்தி ஓரிரு நாளில் அதிகாரிகளை நேரில் அழைத்து வந்து பழுதான சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினா். இதையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com