சிறைத் துறை அலுவலா் தற்கொலை

வேலூா் அருகே சிறைத் துறை அலுவலா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அருகே சிறைத் துறை அலுவலா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அருகே இடையன்சாத்து தேவராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் துளசிராமன்(57). இவா் வேலூா் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் சிறையில் உதவி சிறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தாா். ரத்த அழுத்த நோய், சா்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தாராம். நீண்ட நாள்களாக தொடா் விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்த நிலையில், அவருக்கு நோய் தாக்கம் அதிகரித்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாகாயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com