மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு : 76 போ் மீது வழக்கு பதிவு

வேலூா் மாவட்டத்தில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 76 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 76 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக வந்த புகாரின் பேரில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேலூா் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். பொது இடங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய 76 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com