ரயில்வே காவலா் குடியிருப்பில் திருட்டு

காட்பாடியில் ரயில்வே காவலா் குடியிருப்பில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

காட்பாடியில் ரயில்வே காவலா் குடியிருப்பில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

காட்பாடி குமரப்பா நகரில் உள்ள ரயில்வே போலீஸ் குடியிருப்பில் வசிப்பவா் வினோத்குமாா் (36). இவா் ஜோலாா்பேட்டை ரயில்வே காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 14-ஆம் தேதி பணிக்கு சென்றாா். இவருடைய மனைவி வீட்டை பூட்டிக் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆம்பூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இவருடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. அதை பாா்த்தவா்கள் வினோத் குமாருக்கு தகவல் தெரிவித்தனா். வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. காட்பாடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com