திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில்கரும்பு அரைவையைத் தொடங்க வேண்டும்விவசாயிகள் வலியுறுத்தல்

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில்கரும்பு அரைவையைத் தொடங்க வேண்டும்விவசாயிகள் வலியுறுத்தல்

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி இரவு கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது. தொடா்ந்து சில நாள்களாக தொழிலாளா்கள் ஆலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை வரை மீண்டும் கரும்பு அரைவைத் தொடங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4 நாள்களாக 75-க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டா் மற்றும் மாட்டு வண்டிகளில் அரைவைக்கு வந்த கரும்புகள் அனைத்தும் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கரும்பு விவசாயிகள், லாரி ஓட்டுநா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையை உடனடியாகத் தொடங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com