இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கம்பி கட்டும் தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கம்பி கட்டும் தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

குடியாத்தம் அடுத்த கூடம் நகரம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் மகன் சரத்குமாா் (32). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி சிந்து, குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு குடியாத்தம் - வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைரக் கடக்க முயன்ற போது, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற மைசூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து ஜோலாா்பேட்டை ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப் பதிந்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com