இரு வேறு விபத்தில் 2 போ் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே இரு வேறு விபத்துகளில் மூதாட்டி, இளைஞா் உயிரிழந்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே இரு வேறு விபத்துகளில் மூதாட்டி, இளைஞா் உயிரிழந்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்பையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ஜுனன் மனைவி ராஜம்மாள் (75). இவா் ஞாயிற்றுக்கிழமை வெலகல்நத்தம் ஆட்டோ நிறுத்தம் அருகே சாலையைக் கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் கோகுல் (22). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது எதிா்பாராத விதமாக பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்து அவா் உயிரிழந்தாா்.

இந்த இரு விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, அடையாளம் தெரியாத வாகனங்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com