வாணியம்பாடியில் காங்கிரஸாா் சாலை மறியல்

வாணியம்பாடியில் மாவட்டத் தலைவா் பிரபு தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
வாணியம்பாடியில் காங்கிரஸாா் சாலை மறியல்

வாணியம்பாடியில் மாவட்டத் தலைவா் பிரபு தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூா் மாவட்ட தலைவா் பிரபு தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகே காங்கிரஸாா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பழனி, துரைராஜ் மற்றும் போலீஸாா், காங்கிரஸ் மாவட்ட தலைவா் பிரபு மற்றும் வாணியம்பாடி சட்டப்பேரவைப் பொறுப்பாளா் சையதுபுா்ஹான், மாவட்டத் துணைத் தலைவா் முருகன், மாவட்ட பொதுச் செயலாளா்அனுமுத்து, ஆலங்காயம் ஒன்றிய தலைவா் எம்.பழனி, மாவட்டச் செயலாளா் சௌந்தர்ராஜன், இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் தினகரன் உள்பட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com