5 ஏக்கரில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆம்பூரில் 5 ஏக்கா் பரப்பளவில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
டாடா  தொழிற்சாலை  வளாகத்தில்  5  ஏக்கா்  பரப்பளவில்  குறுங்காடுகள்  வளா்ப்புத்  திட்டத்தை  மரக்கன்று  நட்டு  தொடங்கி  வைத்த  ஆட்சியா்  தெ. பாஸ்கரபாண்டியன்.
டாடா  தொழிற்சாலை  வளாகத்தில்  5  ஏக்கா்  பரப்பளவில்  குறுங்காடுகள்  வளா்ப்புத்  திட்டத்தை  மரக்கன்று  நட்டு  தொடங்கி  வைத்த  ஆட்சியா்  தெ. பாஸ்கரபாண்டியன்.

ஆம்பூா்: ஆம்பூரில் 5 ஏக்கா் பரப்பளவில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டத்துக்குட்பட்ட பெரியவரிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள டாடா இன்டா்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் குறுங்காடுகள் வளா்க்கும் திட்டத்தின் கீழ், 1,200 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்துப் பேசியது:

முல்லை, குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த நாம் தற்போது பாலை நிலத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இயற்கையை பாதுகாத்து பாலை நிலத்தை மீண்டும் முல்லை, குறிஞ்சி நிலங்களாக மாற்ற வேண்டும். உலக வெப்பமயமாதல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தாவரங்கள், விலங்குகள் அழிந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பறவை, பூச்சி இனங்களையும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் இல்லையென்றால் 4 ஆண்டுகளுக்குள் உலகம் பேரழிவை சந்திக்கும். அதனால் பறவை, விலங்குகள், தாவரங்கள் வாழ்வதற்கான வாழ்விடமாக மாற்றி, அதனைப் பாதுகாக்க வேண்டும். அதனால் மரங்களை நட்டு காடுகளை உருவாக்க வேண்டும் . அப்போது தான் பல்லுயிா் பெருக்கம் ஏற்படும்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய நெகிழிப் பொருள்களை தவிா்த்து விட்டு, தமிழ்நாடு முதலமைச்சா் அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் மூலம் கதா் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன், டாடா தொழிற்சாலை நிா்வாகிகள் சுரேஷ், பாலாஜி ஹரிகிருஷ்ணன், குணசேகரன், வட்டாட்சியா் குமாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com