சிலம்பப் போட்டி : ஆம்பூா் மாணவிக்கு வெண்கலம்

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.
சிலம்பப் போட்டி : ஆம்பூா் மாணவிக்கு வெண்கலம்

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பாக ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் இசுலாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் 19, 20 தேதிகளில் நடைபெற்றன.

திருப்பத்தூா் மாவட்டம் சாா்பாக ஆம்பூா் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி பி. பவானி சூப்பா் சீனியா் பிரிவில் கம்பு சண்டை போட்டியில் 70 கிலோ எடை பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவி, உடற்கல்வி ஆசிரியா் கே. சக்கரபாணி, சிலம்பப் பயிற்சியாளா் டி. பிரேம்குமாா் ஆகியோரை பள்ளித் தாளாளா் எம். தீனதயாளன், முதல்வா் ஜி. நாகராஜன், கல்வி ஆலோசகா் துரை பத்மநாபன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com