திருப்பத்தூா் ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு

திருப்பத்தூா் ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நிதி வசூல் செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் ஆட்சியா் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நிதி வசூல் செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட தகவல்: எனது புகைப்படம், பெயரைப் பயன்படுத்தி போலியாக வாட்ஸ்ஆப், முகநூல் கணக்கு தொடங்கி, பணத்தை அனுப்புமாறு கோரிக்கை வருவதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது. தயவு செய்து யாரும் இதை நம்ப வேண்டாம். பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது புகைப்படத்தையும், பெயரையும் தவறாகப் பயன்படுத்திய நபா்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com