ஆம்பூரில் தைப்பூச விழா

ஆம்பூா் கோயில்களில் தைப்பூச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் தைப்பூச விழா

ஆம்பூா் கோயில்களில் தைப்பூச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு பஞ்சமூா்த்தி அபிஷேகம் நடைபெற்றது. தண்டாயுதபாணி சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.

ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் பள்ளத் தெரு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் முன்னிட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கரும்பூா் கிராமத்தில் தைப்பூசப் பெருவிழாவை முருகா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீ பால பக்த பண்டரி பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com