எருது விடும் விழாவில் காளை புறக்கணிப்பு:ஆட்சியா் அலுவலக வாயிலில் மாட்டை கட்டி நூதன போராட்டம்

எருது விடும் விழாவில் காளைகளை புறக்கணித்ததாக கூறி ஆட்சியா் அலுவலக வாயிலில் மாட்டை கட்டி வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்துாா் மாவட்டம், வாணியம்பாடி அருகே வெள்ளக்குட்டை கிராமத்தில் எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.

பெரிய குனிச்சி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பவா், தனது காளையை அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் விழாக் குழுவினா் அவரது காளையை களத்தில் விடாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதனைக் கண்டிக்கும் வகையில் வியாழக்கிழமை மாலை ஆட்சியா் அலுவலக வாயிலில் இரு காளைகளை கட்டி வைத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவல் அறிந்த திருப்பத்துாா் நகர போலீஸாா் சென்று அவரிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

அப்போது கோவிந்தராஜ் கூறுகையில், போலீஸாா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், கோவிந்தராஜ் காளைகளை அழைத்துச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com