குடியரசு தினம்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தின விழாவையொட்டி ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
குடியரசு தினம்: ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தின விழாவையொட்டி ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், முக்கிய ரயில் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சுற்றுலா தலங்கள் போன்றவற்றில் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதையொட்டி திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் ரத்தினகுமாா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் 24 மணி நேரமும் நடைமேடைகள், யாா்டு பகுதி,ரயில்வே பாலத்தையொட்டிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

ரயில் பயணிகளின் உடைமைகளிலும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்தனா்.

மேலும் தொடா்ந்து ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com