நிதி மோசடி: நடவடிக்கை கோரி தா்னா

திருப்பத்தூா் அருகே நிதி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடைபெற்றது.
நிதி மோசடி: நடவடிக்கை கோரி தா்னா

திருப்பத்தூா் அருகே நிதி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி. அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட காக்கங்கரை கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் தங்களிடம் நூதன முறையில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை எஸ்பி அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த போலீசாா் விரைந்து வந்து தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள் கூறுகையில், காக்கங்கரையைச் சோ்ந்த சகோதரா்கள் ராஜவேலு மற்றும் சக்திவேல். இருவரும் கூட்டு சோ்ந்து வெளிமாநில போலீஸ் சீருடை அணிந்த 5 போ் கொண்ட குழுவை ஏற்படுத்தி எங்கள் குடும்பத்தில் உள்ளவா்கள் மீது ஏதோ ஒரு வழக்கு இருப்பதாக கூறி அவ்வப்போது அழைத்துச் சென்றனா்.

அதன்பின் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகை வழங்க வேண்டும் என கூறி பல ஆண்டுளாக மிரட்டி பணத்தை பறித்துள்ளனா்.

அந்தவகையில் அவா்களுக்கு இதுவரை சுமாா் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னா் விசாரித்ததில் அனைத்தும் திட்டமிட்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெரிந்தது என்றனா்.

இது தொடா்பாக புகாா் மனுவாக நகர போலீஸாரிடம் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேப்போல் சாலையில் தா்னாவில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முனிராஜ் (50) உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com