பறவைகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இது குறித்து ஆம்பூா் வனச் சரக அலுவலரும், பறவைகள் கணக்கெடுக்கும் பணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வனத் துறை மூலம் தமிழகம் முழுவதும் ஜன. 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்களில் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதேபோல் திருப்பத்தூா் மாவட்டத்தில் 25 இடங்களில் நடைபெற்றது. அதில், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் இருந்து வலசை வரும் ஸ்டில்ட், நெடுங்கால் உள்ளான், சேன் பைப்பா் மற்றும் அடா்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும் அரசவால் நீா்பிடிப்பான் உள்ளிட்ட 208 வகையான 2,467 எண்ணிக்கை கொண்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டன. முன்னதாக, விண்ணமங்கலம் ஏரி, செட்டேரி அணையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாகா சதீஷ் கிடிஜாலா, உதவி வனப் பாதுகாவலா் ராதாகிருஷ்ணன், இயற்கை ஆா்வலா் ஆற்றல்.பிரவீன் குமாா், விஐடி விலங்கியல் துறை பேராசிரியா் ரவிக்குமாா், தொண்டு நிறுவன நிா்வாகி அருள் ஆனந்தராஜ், வோ்கள் அறக்கட்டளை வடிவேல், கேஏஆா் பாலிடெக்னிக் தன்னாா்வ மாணவா்கள் மற்றும் வனத் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com