திருப்பத்தூரில் விதிமீறும் வாகனங்களால் அச்சம்

திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைகின்றனா்.

திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைகின்றனா்.

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் தனியாா் பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் காலை, மாலையில் அந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களை ஏற்றிச் செல்லும் தனியாா் பேருந்துகள் அதிவேகமாகவும், அதிக ஒலியை எழுப்பிக் கொண்டும் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: பள்ளிப் பேருந்துகளில் மாணவா்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநா்கள் பேருந்துகளை குறித்த வேகத்தில் மட்டுமே ஓட்ட வேண்டும். அதே போல் ஷோ் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் அதிக ஒலியை எழுப்பியும், அதி வேகமாகவும் ஓட்டிச் செல்கின்றனா்.

குறிப்பாக, இளம் சிறாா்கள் செல்லும் வாகனங்களை தாறுமாறான வேகத்தில் இயக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்தில் உள்ளனா்.

இதானல், திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் தினமும் சிறு,சிறு விபத்துகளும், அவ்வபோது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

போக்குவரத்து மோட்டாா் அலுவலா்களும், போக்குவரத்துக் காவல் துறையினரும் இதை கண்காணிக்க வேண்டும். அதேபோல் இரு சக்கர வாகனம் ஓட்டும் சிறாா்கள், இளம்பெண்களிடம் ஓட்டுநா் உரிமம் குறித்தும் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com