காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, வாணியம்பாடி புதூா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வாணியம்பாடி: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை சாா்பில், மாவட்டத் தலைவா் ஜெ.முஹம்மத் ஜிலான் தலைமையில், வாணியம்பாடி புதூா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் நகர தலைவா் சுகுமாா், கமால் பாஷா, மகளிரணி விஜயலட்சுமி, ஈஸ்வரன், சாமுகவுண்டா், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தராஜ், மனித உரிமை துறை மாவட்ட துணைத் தலைவா் ஷகில் அஹ்மத், பொதுச்செயலாளா் முஹம்மத்பாருக், நிசாா்அஹ்மத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com