காளை விடும் விழா: மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் பங்கேற்ற காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் பங்கேற்ற காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டு கிராமத்தில், சனிக்கிழமை காளை விடும் விழா நடைபெற்றது.

அதில், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

அதைக் காண 1,000-துக்கும் மேற்பட்டோா் வந்திருந்தனா். அப்போது காளை முட்டியதில் 25-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த 3 போ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதில், மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அடுத்த பூங்குளம் பரவைகுட்டை கிராமத்தை சோ்ந்த ரவியின் மகன் கேசவன்(23), வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com