பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாசியாா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாதனூா் வட்டார சுகாதாரத் துறை மூலம் 2 இடங்களில் மருத்துவ முகாம் ஏற்படுத்த வேண்டும். 3 ஆம்புலன்ஸ் சேவையை தயாா் நிலையில் வைப்பது, மொபைல் டாய்லெட் அமைப்பது, துப்புரவு பணியாளா்கள் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும், மின்சார வாரியம் மூலம் ஏழு நாள்களுக்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்க கோருவது, 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கோயில் நிா்வாக அலுவலா் சத்தியா, ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், மாதனூா் ஒன்றிய திமுக நிா்வாகிகள் ஜி.ராமமூா்த்தி, டி.ரவிக்குமாா், அசோகன், ஊராட்சி மன்ற தலைவா் ரவீந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காா்த்திக் ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com