திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக நீதிமன்றப் புறக்கணிப்பு: வழக்குரைஞர்கள் பேரணி

குற்றவியல் சட்டங்களைத் திருத்தம் செய்ததைக் கண்டித்து திருப்பத்தூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஏற்கெனவே திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 3-ஆவது நாளாக திருப்பத்தூா் ரயில்வே நிலையத்துக்கு சுமாா் 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பேரணியாகச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com