ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே கடத்தி செல்வதற்காக பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி அருகே கடத்தி செல்வதற்காக பதுக்கப்பட்டிருந்த 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாணியம்பாடி ரயில் நிலையம் மற்றும் தும்பேரி கூட்டுச் சாலை பகுதியில் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து சோதனை செய்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை ரயில் மற்றும் பேருந்து மூலம் கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது. பிறகு இரு இடங்களிலிருந்து 12 மூட்டைகளில் இருந்த 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து திருப்பத்தூா் நுகா்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com