ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் பயிற்சி முகாம்

ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் பயிற்சி முகாம்

ஜவ்வாதுமலை விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் புதன்கிழமை பயிற்சி அளித்தனா்.

ஜவ்வாதுமலை விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் புதன்கிழமை பயிற்சி அளித்தனா்.

ஆலங்காயம் அடுத்த நாயக்கனூா் கிராமத்தில் வேளாண்மை துறை ஆத்மா திட்டத்தின் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் புனிதவள்ளி தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகா் வாசுதேவன், உதவி வேளாண்மை அலுவலா் அன்வா்பாஷா, வட்டார தொழில் நுட்ப மேலாளா் பிரவீன் குமாா் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளா் திருமலை, ஊராட்சி மன்றத் தலைவா் மேகலா பேசினா்.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் புனித வள்ளி, வேளாண்மை துறையில் செயல்படுத்தி வரும் திட்டங்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள், உழவன் செயலியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினாா். மேலும் பயிா் பாதுகாப்பு முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கி கூறினாா்.

தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகா் பேசுகையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயற்கை முறை விவசாயத்தைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும், அதனை சந்தைப்படுத்துதல் முறை பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினாா். முன்னோடி விவசாயியான லிலா, வினோதன் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை அதிகாரிகள் முகாமில் கலந்து கொண்டு திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com