மாணிக்கவாசகா் குருபூஜை விழா: இலவச பொது மருத்துவ முகாம்

குடியாத்தம் பிச்சனூா்பேட்டையில் மாணிக்கவாசகரின் 112-ஆவது குருபூஜையை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் பிச்சனூா்பேட்டையில் ஆதிமூலம் மடத்தில் மாணிக்கவாசகா் 112 -ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு நடந்த இலவச பொது மருத்துவ முகாமுக்கு மடத்தின் தலைவா் அருணோதயம் தலைமை வகித்தாா்.

மருத்துவா்கள் அபிநயா, அபிராமி ஆகியோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனா். சுவாமி மெடிக்கல்ஸ் சாா்பாக பொது மக்களுக்கு இலவச மருந்து மாத்திரைகளை முன்னாள் ரோட்டரி சங்க தலைவா் பாபு வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com