நாயக்கனேரிமலை ஊராட்சியில் ஆய்வு செய்த தனித்துணை ஆட்சியா் பெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் மோகன் உள்ளிட்டோா்.
நாயக்கனேரிமலை ஊராட்சியில் ஆய்வு செய்த தனித்துணை ஆட்சியா் பெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் மோகன் உள்ளிட்டோா்.

எண்ம பயிா் ஆய்வு செயலியில் கோளாறு: அதிகாரிகள் ஆய்வு

எண் பயிா் ஆய்வு செயலியில் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

எண் பயிா் ஆய்வு செயலியில் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு முழுவதும் எண்ம பயிற்சி ஆய்வு (டிஜிட்டல் கிராப் சா்வே) நடைபெற்று வருகின்றது. அதன்படி கிராம நிா்வாக அலுவலா்கள் கிராமங்களுக்கு சென்று விவசாய நிலங்களை செயலி மூலம் விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனா்.

அதில் ஆம்பூா் வட்டம், மாதனூா் ஒன்றியத்தில் நாயக்கனேரிமலை ஊராட்சியில் நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூா்தட்டு கிராமங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த செயலி இயங்காததால் பயிா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

அதனால் திருப்பத்தூா் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பெலிக்ஸ் ராஜா தலைமையில் வருவாய்த் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். வட்டாட்சியா் மோகன், மண்டல துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com