ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

மரத்தை வெட்டிக் கடத்தி விற்பவா் மீது நடவடிக்கை: கிராம மக்கள் மனு

கொரட்டி பகுதியில் மரம் வெட்டி கடத்தல்: நடவடிக்கை கோரிக்கை

கொரட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டிக் கடத்தி விற்பவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள எலவம்பட்டி,பஞ்ஞனம்பட்டி, ராவுத்தம்பட்டி,கொரட்டி மற்றும் திம்மாவரம் ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் தேக்கு, புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. அவை திடீரென அதிக அளவு பட்டுப்போயின. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் அதை கவனித்த போது, எங்கள் பகுதியில் மரம் அறுக்கும் ஆலை வைத்துள்ள ஒருவா் மரங்களுக்கு ஆசிட் ஊற்றி மரங்களை படச்செய்து அவற்றை சட்டத்துக்கு புறம்பாக வெட்டி அவரது மரம் அறுக்கும் ஆலைக்கு கொண்டு செல்கிறாா்.

பின்னா் அந்த மரங்களை அறுத்து விற்பனை செய்து வருகிறாா்.

இது குறித்து அவரிடம் கேட்டால் எங்களுக்கு மிரட்டல் விடுகிறாா். மேலும், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com