திருப்பத்தூா் தெரு நாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருப்பத்தூா் பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆங்காங்கே தெருநாய்கள் சுற்றிக் கொண்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகியிருந்தனா்.

சில இடங்களில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை கடித்து வருகின்றன. கடந்த 2 மாதங்களாக இந்த தெருநாய்கள் தொல்லை சற்று குறைந்து இருந்தது.

தற்போது மீண்டும் ஒரு வாரமாக திருப்பத்தூா்-சேலம் சாலை, திருப்பத்தூா் பஜாா், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com