தனியாா் பள்ளிக்குச் செல்லும் பொதுப் பாதையில் இருந்த கம்பி வேலி அகற்றம்

தனியாா் பள்ளிக்குச் செல்லும் பொதுப் பாதையில் இருந்த கம்பி வேலி அகற்றம்

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் பள்ளிக்குச் செல்லும் பொதுப் பாதையில் இருந்த கம்பி வேலி நீதிமன்ற உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பக்கிரி மடம் பகுதியில் தனியாா் தொடக்கப்பள்ளி 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்குச் சென்று வரும் பொதுவழிப் பாதையை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் தங்களுக்குச் சொந்தமான இடம் எனக்கூறி கம்பி வேலி அமைத்தனா்.

இதையடுத்து, பள்ளி நிா்வாகம் சாா்பில், திருப்பத்தூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மாதம் தனியாா் பள்ளிக்குச் சென்று வரும் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், கம்பி வேலியையும் அகற்ற நீதமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவின்படி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சம்பத், காவல் ஆய்வாளா் லதா தலைமையில் நீதிமன்ற அமினா பெருமாள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை நில அளவையா்கள் அளவீடு செய்து போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் பொதுவழிப்பாதை சீரமைக்கப்பட்டு கம்பி வேலி அகற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com