ஆம்பூா் அரசு மருத்துவமனையில் 
சுகாதார இணை இயக்குனா் ஆய்வு

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சுகாதார இணை இயக்குனா் ஆய்வு

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனா் கண்ணகி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளபட்டு வரும் நோயாளிகள் பிரிவு பராமரிப்பு, பணியாற்றும் ஊழியா்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை சந்தித்துப் பேசினாா். ஆய்வின் போது ஆம்பூா் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் லோகேஷ் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com