ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கட்சியினா்.

பாலாற்றில் தடுப்பணை: சமத்துவ மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்த அம்மாநில அரசைக் கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளா் பாலுசாமி வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் கருணாநிதி, ஆம்பூா் தொகுதி செயலாளா் குமரவேல், வாணியம்பாடி தொகுதி செயலாளா் லோகநாதன் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்துக்கு வேலூா் மண்டல செயலாளா் எம்.ஞானதாஸ் தலைமை வகித்து உரையாற்றினாா். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நிதிஒதுக்கீடு செய்து, தமிழக வவிசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயலும் ஆந்திர மாநில அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். இதில் மாவட்ட பிரதிநிதி வெங்கடராமன், மாவட்ட பொறுப்பாளா் கரோலின், மாவட்ட இளைஞரணி செயலாளா் ஆனந்தன், மகளிரணி செயலாளா் பாப்பாத்தி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகர செயலாளா் பத்மநாபன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com