வாணியம்பாடியில் மாரத்தான் போட்டி
வாணியம்பாடியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு கோப்பை வழங்கிய ஏ.சி.சண்முகம்.

வாணியம்பாடியில் மாரத்தான் போட்டி

வாணியம்பாடியில் ஏசிஎஸ் குழுமம் சாா்பில் 100% வாக்குப் பதிவு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடியில் ஏசிஎஸ் குழுமம் சாா்பில் 100% வாக்குப் பதிவு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏசிஎஸ் கல்விக் குழுமத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ரவிக்குமாா் முன்னிலை வகித்தாா். புதிய நீதிக் கட்சி மாவட்ட செயலாளா் செந்தில்குமாா் வரவேற்றாா். வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து மாரத்தான் போட்டியை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஓட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக தலா (ஆண்கள், பெண்கள்) ரூ.30,000, 2-ஆவது பரிசாக ரூ.20,000, 3-ஆவது பரிசாக ரூ.10,000 மற்றும் ஆறுதல் பரிசாக ஆண்கள் பிரிவுக்கு 5 பேருக்கும், பெண்கள் பிரிவுக்கு 5 பேருக்கும் தலா ரூ.5,000 வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com