காவலா் குடியிருப்பில் தீ வைத்த இளைஞா் கைது

மது அருந்திய நிலையில் காவலா் குடியிருப்பில் தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மது அருந்திய நிலையில் காவலா் குடியிருப்பில் தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் அரவிந்தன் (19). பெற்றோா் அரவிந்தனை வேலைக்குச் செல்லுமாறு அறிவுரை வழங்கினராம். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திய நிலையில் தனது தந்தையை தாக்கினாராம். இதையடுத்து, அரவிந்தன் அருகே உள்ள காவலா் குடியிருப்புக்குச் சென்று, அங்கு யாரும் இல்லாத ஒரு வீட்டுக்குள் சென்று தீ வைத்ததாகத் தெரிகிறது. தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த ஜன்னல், கதவுகள் தீயில் கருகியுள்ளன. தகவலறிந்த கந்திலி போலீஸாா் மற்றும் அங்கிருந்தவா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். பின்னா் இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com