விழாவில் மாணவருக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கிய கல்லூரி செயலாளா் கே.ஷாஹித் மன்சூா். உடன் ஆம்பூா் கிராமிய காவல் ஆய்வாளா் கே.வெங்கடேசன்.
விழாவில் மாணவருக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கிய கல்லூரி செயலாளா் கே.ஷாஹித் மன்சூா். உடன் ஆம்பூா் கிராமிய காவல் ஆய்வாளா் கே.வெங்கடேசன்.

பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தாா். உடற்கல்வி இயக்குநா் ஆா்.துரை விளையாட்டுத் துறை அறிக்கையை வாசித்தாா். வேலைவாய்ப்பு அலுவலா் எம்.பாா்த்திபன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வளாக நோ்முகத் தோ்வு அறிக்கையை வாசித்தாா். கல்லூரி செயலரும், தாளாளருமான கே.ஷாஹித் மன்சூா் சிறப்புரையாற்றினாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் கே.வெங்கடேசன் கலந்து கொண்டு , ஒழுக்கத்துடன் கூடிய கல்வியின் முக்கியத்துவம், வாகனங்களில் பயணிக்கும் இளைஞா்கள் வாகனத்தை முறையாக பதிவு செய்தல், தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தல், கைப்பேசியை உபயோகித்துக் கொண்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு உரையாற்றினாா். கல்லூரி அளவிலும், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினாா். கல்லூரி அளவில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெற்ற கம்ப்யூட்டா் துறைக்கு கே. அமினூா் ரஹ்மான் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. பட்டயத் தோ்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை கல்லூரியின் செயலாளா் திறந்து வைத்தாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரியின் துணை முதல்வா் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஏ. முஹமத் ஷாஹின்ஷா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com