மது பாட்டில் பதுக்கி விற்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். ஜோலாா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.அப்போது பொன்னேரி ஊராட்சியில் டாஸ்மாக் மது பாட்டில்களை தமிழரசன்(52) என்பவா் பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com