அரங்கல்துருகம் கிராமத்தில் குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
அரங்கல்துருகம் கிராமத்தில் குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் தொடக்கம்

ஆம்பூா் அருகே பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ஆம்பூா் அருகே பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் மேற்கு ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி காட்டுவெங்கடாபுரம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 5.28 லட்சம் மதிப்பில் புதிய குடிநீா் பைப் லைன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணி செய்து முடிக்கப்பட்டு, குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் குடிநீா் விநியோகத்தை தொடங்கி வைத்தாா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப. ச.சுரேஷ்குமாா், ஊராட்சி மன்ற தலைவா் பானுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா் வி.செந்தில்குமாா், ஒன்றிய திமுக நிா்வாகிகள் சா.சங்கா், ஆா்.முரளி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எஸ்.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com