சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ 7 லட்சம்

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 7.0 6 லட்சம் ரொக்கம், 209 கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி இருந்தது.

நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய நகை மற்றும் காணிக்கையை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திலகா், சத்யா சண்முகம், செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகுமாா் ஆகியோா் முன்னிலையில் எண்ணப்பட்டது.

அதில் ரூ.7.06 லட்சம், 209 கிராம் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளியையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com