போலி மருத்துவா் கைது

ஆம்பூரில் போலி மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் 2-ஆவது தாா்வழி பகுதியில் போலி மருத்துவா் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் லோகேஸ்வரன் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் அந்தப் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த ரகுபதி என்பவரின் மனைவி ரஜினிகாந்தி (42) என்பவா் எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com