பணிகளை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன். உடன் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன்.
பணிகளை தொடங்கி வைத்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன். உடன் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன்.

ரூ.70 லட்சத்தில் திட்டப் பணிகள்: குடியாத்தம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

மாதனூா் ஒன்றியத்தில் சுமாா் ரூ.70 லட்சத்தில் திட்டப் பணிகளை குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, பழையமனை பகுதியில் அயோத்திதாசா் பண்டிதா் திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணி, 15-ஆவது நிதிக்குழு மான்யத்தில் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி, ரூ.6 லட்சத்தில் கைலாசகிரி ஊராட்சியில் கழிவுநீா் வடிகால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா்.

மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, மாதனூா் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஒன்றிய திமுக நிா்வாகி சிவக்குமாா், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா, துணைத் தலைவா் விஜய், ஒன்றியக்குழு உறுப்பினா் திருக்குமரன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com