மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து சேவை தொடக்கம்

மலைவாழ் மகளிருக்கு 
இலவச பேருந்து சேவை தொடக்கம்

புதூா்நாடு கிராமத்தில் மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டது. திருப்பத்தூா் வட்டத்துக்குட்பட்ட ஜவ்வாதுமலை புதூா்நாடு கிராமம் மலைவாழ் மகளிா் நீண்ட கால கோரிக்கையின் பேரில், இலவச பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழச்சிக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி தலைமை வகித்து பேருந்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயா அருணாசலம், மாவட்ட குழு உறுப்பினா் சத்தியவாணி வில்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் துக்கன்,பிருந்தாவதி, கஸ்தூரி ரகு, ஊராட்சி மன்றத் தலைவா் அலமேலு செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com