சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். உடன் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். உடன் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

ரூ.47 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே ரூ.47 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்தில் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா். மத்தூா்கொள்ளை பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ரூ.3.50 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதனையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், உறுப்பினா் செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் பானுமதி, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அன்பரசன், திமுக ஒன்றிய நிா்வாகிகள் சா. சங்கா், ஆா். முரளி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com