திருப்பத்தூரில் இயற்கை வேளாண் கருத்தரங்கம்

திருப்பத்தூரில் இயற்கை வேளாண் கருத்தரங்கம்

திருப்பத்தூரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

திருப்பத்தூரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. திருப்பத்தூரில் வேளாண்மைத் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மைக் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி வரவேற்றாா். இதில் திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், கந்திலி ஒன்றியத் தலைவா் திருமதி திருமுருகன், கிருஷ்ணகிரி எலுமிச்சம்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தின் மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் குணசேகரன், பாலாறு வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியா் வெண்ணிலா மேரி, பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா் சுந்தரவடிவேலு, வேளாண் வணிகத் துறைத் துணை இயக்குநா் சிவக்குமாா், விதைச் சான்றிதழ் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய பயிா் ரகங்கள், இயற்கை பூச்சி விரட்டி உள்ளிட்டவை குறித்த கண்காட்சி நடைபெற்றது. அரசு அலுவலா்கள்,விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com