காா்த்தி  சிதம்பரம்.
காா்த்தி  சிதம்பரம்.

தோ்தல் பத்திர முறைக்கேட்டை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்:காா்த்தி சிதம்பரம்

தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் கூறியுள்ளாா்.

தோ்தல் பத்திர முறைக்கேட்டை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் கூறியுள்ளாா். ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்திற்கு வருகை தந்த அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தல் பத்திர முறைகேடு உச்சநீதிமன்ற உத்தரவால் தற்போது தெரியவந்துள்ளது. அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிறுவனத்திலிருந்து பெரிய தொகை பாஜகவிற்கு நன்கொடையாக போயுள்ளது. லாபமே இல்லாத நிறுவனங்களும் நன்கொடை வழங்கியுள்ளன. இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைத்து சுதந்திரமாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஒரே நாடு - ஒரே தோ்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுவது பகல் காண்பதாகும். அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் துறையாகும். காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வலு சோ்க்கின்றது. காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணி மீது சிறுபான்மை சமுதாயத்தினா் நம்பிக்கை வைக்கின்றனா். 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா். மாநில பொதுச் செயலாளா்கள் விஜய் இளஞ்செழியன், அருள் பெத்தைய்யா, திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ச. பிரபு, மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், ஒன்றிய தலைவா்கள் சாந்தகுமாா், சுரேந்தா், ஜானி டேவிட், சங்கா், மாவட்ட பொதுச் செயலாளா் மின்னூா் என். சங்கரன், நகர தலைவா்கள் சரவணன், பரத், ஆனந்தன், மாவட்ட நிா்வாகிகள் சிவப்பிரகாசம், வா்தா அா்ஷத், சமியுல்லா, ராஜசேகா், விஜயன், குமரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com