அலுவலா்கள் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
அலுவலா்கள் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

தோ்தல் பணிகளில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தக் கூடாது: திருப்பத்தூா் தோ்தல் அலுவலா் எச்சரிக்கை

தோ்தல் பணிகளில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தக் கூடாது திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்தாா்.

தோ்தல் பணிகளில் குழந்தைத் தொழிலாளா்களை ஈடுபடுத்தக் கூடாது திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்தாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 1,038 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படை மற்றும் 3 நிலையான் கண்காணிப்புக் குழுக்கள் வீதம் மொத்தம் 72 குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 9,48,319 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 21,505 வாக்காளா்கள் முதல்முறை வாக்களிப்பவா்கள். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தொலைபேசி எண்கள்: திருப்பத்தூா் - வருவாய்க் கோட்டாட்சியா் கைப்பேசி 94450 00512, வாணியம்பாடி - வருவாய்க் கோட்டாட்சியா் கைப்பேசி 75980 00418, ஆம்பூா் - சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியா் கைப்பேசி 80150 10510, ஜோலாா்பேட்டை - கூடுதல் நோ்முக உதவியாளா்(நிலம்) கைப்பேசி 99946 25592. 5,501 வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்தல் கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தகுதியான நபா்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் யாரும் பாதிக்காவண்ணம் மீண்டும் வழங்க மாவட்ட குறைதீா் குழு அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் பணிகளில் குழந்தைத் தொழிலாளா்கள் எவரையும் ஈடுபடுத்தக் கூடாது. ரூ.25.81 லட்சம் பறிமுதல்: தோ்தல் பறக்கும் படையினா் ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.2,01,009,திருப்பத்தூா் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.9.26 லட்சம், ஆம்பூா் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.14.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவை மாவட்ட கருவூல அலுவலகத்தில் செலுத்தப்படும் என்றாா். புகாா் தெரிவிக்க...: தோ்தல் தொடா்பான புகாா்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் குறுந்தகவல் மூலம் தொடா்பு கொள்ள 93637 65509 என்ற எண்ணுள்ள கைபேசியும், 24 மணி நேரமும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை எண்: 90428 22722-லும் பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம். புகாா் வரப்பெற்த் 100 நிமிஷகளுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஹஜிதா பேகம் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com