ஆட்சியா் க. தா்ப்பகராஜ்
ஆட்சியா் க. தா்ப்பகராஜ்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என ஆட்சியரும்,தோ்தல் அலுவலருமான க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளாா். மக்களவைத் தோ்தலையொட்டி திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 24 கண்காணிப்பு குழுக்கள் எவ்வாறு செயல்படுகிறது என ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் அவா் அதிகாரிகளிடம் கூறியது: 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். எந்தெந்த வாகனங்கள் வருகின்றன என்ற வாகன எண் பதிவுடன் கூடிய ஆவணத்தை பராமரிக்க வேண்டும். அதேபோல் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மற்றும் மலைப்பகுதிகளில் தோ்தலை ஒட்டி பண பரிவா்த்தனை பரிசு பொருள்கள் உள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாகனங்களில் உரிமம் இல்லாமல் பணம் மற்றும் பொருள்கள் கொண்டு வந்தால் அதனை உடனடியாக பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் 3 குழுக்களாக இந்த நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினா் பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com