ஆம்பூரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை

ஆம்பூா் அருகே திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். ஆம்பூா் நகர காவல் நிலையம் உள்பட திருப்பத்தூா் மாவட்டத்தில் சில காவல் நிலையங்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதைத் தொடா்ந்து ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் விசாரணை நடத்தினா். அங்குள்ள நபரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com