வாகன சோதனையில் ரூ.31.90 லட்சம் பறிமுதல்

ஆலங்காயம் அருகே தோ்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 31. 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம்-காவலூா் சாலையில் நாயக்கனூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பிரித்தி தலைமையில் பறக்கும்படையினா் வியாழக்கிழமை வாகன சோதனை செய்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவனமின்றி ரூ. 31 லட்சம் எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் காவலூா், ஆலங்காயம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனா். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று ஆலங்காயம்-ஓடுகத்தூா் நெடுஞ்சாலையில் கோமுட்டேரி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையிலான குழுவினா் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் ரூ.90,000 எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. தொடா்ந்து நடத்திய விசாரணையில் நிதி நிறுவனத்துக்காக வசூல் செய்து எடுத்து சென்றதாக கூறியுள்ளாா். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்தத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டு வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலக்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com