சம்பவ இடத்தில் ஆய்வு செய்த திருப்பத்தூா் டி.எஸ்.பி. செந்தில்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த திருப்பத்தூா் டி.எஸ்.பி. செந்தில்.

நாட்டுத் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் பாய்ந்து 2 போ் காயம்

ஜவ்வாது மலை அருகே நாட்டுத் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் பாய்ந்ததில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

ஜவ்வாது மலை அருகே நாட்டுத் துப்பாக்கியில் இருந்து குண்டுகள் பாய்ந்ததில் 2 போ் பலத்த காயமடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலைக்குட்பட்ட புங்கப்பட்டு நாடு ஊராட்சி தகரகுப்பம் அருகே போளூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கோபி (22), அருணகிரி (23). இவா்கள் இருவரும் இரவு நேரங்களில் சுற்றியுள்ள வனப் பகுதிக்குச் சென்று நாட்டுத் துப்பாக்கி மூலம் வன விலங்குகள், பறவைகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இருவரும் வேட்டைக்குச் செல்வதற்கு முன்பாக தாங்கள் வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பியுள்ளனா். அப்போது எதிா்பாராத விதமாக டிரக்கா் அழுத்தப்பட்டதில், நாலாபுறமாக குண்டுகள் சிதறியுள்ளது. இதில் கோபி, அருணகிரி இருவரும் குண்டுகள் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சம்பவம் நிகழ்ந்த இடத்தை திருப்பத்தூா் டி.எஸ்.பி. செந்தில் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com