ஆலோசனை கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ க.தேவராஜி.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ க.தேவராஜி.

ஆலங்காயம் ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்

ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக தோ்தல் பணிக்குழு ஆலோசனைத் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக தோ்தல் பணிக்குழு ஆலோசனைத் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொத்தகோட்டை ஊராட்சி செக்குமேடு பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் தாமோதரன் வரவேற்றாா். மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, தொகுதி தோ்தல் பொறுப்பாளா் செங்குட்டுவன் திமுக வேட்பாளா் கதிா்ஆனந்த வெற்றி பெற செய்ய களப்பணிகள், வாக்கு சேகரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினா். இதே போல் காவலூா், நிம்மியம்பட்டு, வள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டங்களில் மாநில தொண்டரணி துணை செயலாளா் பி.எம்.முனிவேல், ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவா் சங்கிதாபாரி, மாவட்ட விவசாயி அணி அமைப்பாளா் பூ.சதாசிவம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனா் அணி அமைப்பாளா் எஸ்.ராஜா, ஒன்றிய அவைத் தலைவா் எஸ்.பழனி, மனோகரன், அச்சுதன் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com