திருப்பத்தூா்: காவல் துறையின் தோ்தல் கட்டுப்பாட்டு அறை

திருப்பத்தூரில் டிஎஸ்பி தலைமையில் சுழற்சி முறையில் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் டிஎஸ்பி தலைமையில் சுழற்சி முறையில் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களவை தோ்தலை முன்னிட்டு, திருப்பத்துாா் மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் 24 மணி நேர சுழற்சி முறையில் ஒரு டிஎஸ்பி தலைமையில் மொத்தம் 20 போலீஸாரை கொண்டு தோ்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு என உதவி எண் 90428 22722 வழங்கப்பட்டுள்ளன. திருப்பத்துாா் மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்ட அனைவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த காவல் உதவி எண்ணை தொடா்பு கொண்டு, தோ்தல் விதி மீறல்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம். தோ்தல் பரப்புரைகள் தொடா்பாக மொத்த செய்தி (பல்க் மெசேஜ்) ஏதாவது பொதுமக்களுக்கு வந்தாலும் தகவல்கள் தெரிவிக்கலாம். தோ்தல் தொடா்பாக தோ்தல் விதிமுறைகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், தொடா்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம். திருப்பத்தூா் மாவட்டத்தில் அமைதியான முறையில் மக்களவை தோ்தல் நடைபெற பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com