ஆம்பூா் முகாமில் தோ்தல் பயிற்சி அளித்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா
ஆம்பூா் முகாமில் தோ்தல் பயிற்சி அளித்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி

அரசு பணியாளா்களுக்கான பயிற்சி முகாமை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு பணியாளா்களுக்கான பயிற்சி முகாமை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டாட்சியா் மோகன், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன், வட்ட வழங்கல் அலுவலா் பாரதி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா். மொத்தம் 877 அரசு பணியாளா்கள், ஆசிரியா்களில் 833 போ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனா். உடல் நலக்குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் 44 போ் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com